Saturday, August 18, 2018
Thursday, August 2, 2018
இலங்கை - 4ஆவது அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு
இலங்கை - #4ஆவது_அனைத்துலக_முருக_பக்தர்கள்_மாநாடு - கொழும்புவில் உள்ள மாணிக்கப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் இன்று (02-08-2018) மாலை 4.00 மணியளவில் இனிதே துவங்கியது. முதல் நாளான இன்று நமது #கௌமார_மடாலயம், சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள் முனைவர் தவத்திரு. #குமரகுருபர_சுவாமிகள், மலேசியா திருவாக்கு பீடம் தவத்திரு. பாலயோகி சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீன குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. சிவஞானபாலய சுவாமிகள் ஆகிய அருளரசர்கள் எழுந்தருளி மாநாட்டின் துவக்க விழாவினைச் சிறப்பித்தனர். இலங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருமிகு. இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டது மாநாட்டிற்கு மேலும் சிறப்பாக அமைந்தது. வரவேற்பு, செங்கோல் வழங்குதல், மாநாட்டு விழா மலர் வெளியீடு, மாநாட்டில் கலந்துகொண்ட அருளாளர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் சிறப்பு செய்தல் ஆகியவை இன்றைய சிறப்பம்சங்களாக விளங்கின. நூற்றுக்கணக்கான குழந்தைகள் முருகப்பெருமான் வேடம் அணிந்தும், காவடி எடுத்தும் மாநாடு நடைபெறும் பகுதியின் சாலைகளில் ஊர்வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்தியா, மலேசியா, சுவிற்சர்லாந்து, இங்கிலாந்து, பிரான்சு இன்னும்பிற உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு துவக்க விழாவினைச் சிறப்பித்தனர்.
செங்கோல் வழங்குதல் |
மாநாட்டு மலர் வெளியீடு |
சிறப்புச் செய்தல் |
Subscribe to:
Posts (Atom)
-
# சித்திரத்_தேர் # கௌமார_மடாலயம் , தண்டபாணிக் கடவுள் திருக்கோயில்த் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்... ☀️ நமது # சிரவணபுரம் கௌமார ம...