வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய மாதை மழைப்பதிகம்... பதிகம்: 1 கலாபமயி லாதியவும் காசினியோ ரிட்டபயிர் எலாமுமிகச் சோர்வுற்ற இக்கணமே மழைபெயச் செய்! நிலாவுதெய்வம் முழுதானாய்! நீசமுற்ற சூர்யன் தான் துலாமதியில் இவ்வாறு துலங்குவது முறையன்றே. பதிகம்: 2 அசுரரினும் கொடியாருக் கரசளித்த கொடுமையன்றி விசுவமதை மழையின்றி வெதுப்புவதும் முறைதானோ? முசுவினுக்கும் உலகீந்த முக்கணன் ஆதியர் ஆனாய்! நசுநசுத்த மழையிந்த நாள் தொடங்கிப் பெயச்செய்யே. பதிகம்: 3 பெறலரும்பே றாகிமழை பேருலைகப் பிணிப்பதனால் இறவியொடு பிறவியற்றோர் யாரேனும் இலர்கொல்லோ? அறம்வளர்த்தாள் ஆதியதே வத்தனையும் ஆம்ஒன்றே மறமுழுதும் தீர்வதற்காம் வகைசெயச்சற் றிரங்குதியே. பதிகம்: 4 உலகளிக்கும் தயை நீங்கி ஒழிப்பதற்குத் துணிந்தான்போன்று இலங்குகின்றாய்! மழையின்றேல் யாதேனும் உயுங்கொல்லோ? மலரவனை ஈன்றநெடு மால்முதலா மறைகூறும் பலபலதே வருமாகிப் பரந்துளதோர் பரம்பொருளே பதிகம்: 5 நல்லார்இங் கொருவர்உற்றால் நால்வகையோ னியிற்சீவர் எல்லார்க்கும் மழைபெயும்என் றியம்பியசொற் பழுதாமோ? பொல்லாதென்றுரைத்தாற்கும் புகழ்விளைத்த பூட்கைமுதல் வல்லார் ஏத் தியதெய்வ வகைமுழுதாய் வாழ்வானே. பதிகம்: 6 நின்பாடல் அத்தனையும் நிகழ்த்துவிப்போன் யானென அன்று அன்பாளர் இருவரெதிர் அறைந்தமைசத் தியமானால் வன்பாரும் அறிந்துவப்ப மழையின்னே பெயல் வேண்டும் கொன்பாவும் வேலன் முதற் குலவுநர் முற் றாவானே. பதிகம்: 7 இச்சகத்திற் கார்காலம் எரிவேனில் ஆதல்உணர்ந்து அச்சமுற்றுப் பலர்கூவென் றழுகின்றார். அருளாண்மை மிச்சமுறும் ஒருதொண்டன் மேதினியில் இலைகொல்லோ? பொச்சமிலார் உளந்தோறும் புகுந்தொளிரும் பூரணமே. பதிகம்: 8 முன்னாளில் நெல்லையில் என் மொழிக்காக மழைஈந்தாய்! இந்நாளில் ஆமாத்தூர் இடத்ததுசெய் தருளாயோ? பின்னாளிற் பெற்ற அருட் பேறிளைத்தால் இழிவுன்னை மன்னாதோ? அளப்பரிய மதந்தொறும்வாழ் வண்மையனே. பதிகம்: 9 ஒருமதத்தோர் தொழுந்தேவென்றுரைத்தமொழிப் பலித்தெங்கும் மருவுபரம் எனப்போற்றல் வம்புபடத் தகுங்கொல்லோ? கருமுகில்பெய் திடுநாள்புல் கருகவிடல் கொடிதன்றோ? சருவபிர சாதம்மனஞ் சான்றாகத் தருந்தேவே. பதிகம்: 10 மெய்யுலகும் என்மனமும் வியப்பவிளை யாடிடும்நீ பெய்யுமுகிற் புனல்ஈந்திப் பேயுலகம் களிகூரச் செய்யுமதற் கிசையாயோ? திருவருளிற் பிழையுண்டோ? பொய்யுரைக்கும் பாதகர்க்கும் போகம்ஈந் தருள்வானே. பதிகம்: 11 அன்றிருவர்க் கருள்ஈந்திட் டகிலம்அழும் துயர்கண்டுட் கன்றிடலின் மனந்தேற்றும் கறைகண்டன் முதலோரா நின்றகத்திந் நாள்எனைஇந் நெடுந்துயர்செய் திடுவானே! பொன்றிடல்தீர் முகில்மாரி பொழிய அருள் புரிவாயே. பதிகம்: 12 வெறும்பாடற் புலவருக்கும் விருப்பளித்து வியன்சந்தம் உறுபாடற் கிரங்காத தொத்திருக்கும் ஒன்றின்பால் செறும்பான்மைக் கலியஞ்சத் திருப்புகழோன் செப்புமிவை குறும்பாளர் இகழாமல் குலவுநிற்பார் குளிர்தருமே.
Saturday, April 27, 2019
மாதை மழைப்பதிகம் | வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் | Siravai Adheenam

Subscribe to:
Post Comments (Atom)
-
# சித்திரத்_தேர் # கௌமார_மடாலயம் , தண்டபாணிக் கடவுள் திருக்கோயில்த் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்... ☀️ நமது # சிரவணபுரம் கௌமார ம...
No comments:
Post a Comment