Thursday, May 23, 2019

திருநெறிய தெய்வத் தமிழ்ப் பாடல்கள் வீரமாத்தி அம்மனுக்கு விண்ணப்பம்


பன்னிரு திருமுறை, திருப்புகழ், மருதமலை அலங்காரம், அபிராமி அந்தாதி, பச்சை நாயகி அம்மன் பிள்ளைத்தமிழ், முருகன் மழைப்பதிகம், கந்தர் அநுபூதி, சைவசமய வாழ்த்து ஆகிய தெய்வத் தமிழ்ப் பாடல்கள் கோவை, விளாங்குறிச்சி, அருள்மிகு வீரமாத்தி அம்மனுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு திருநெறிய தெய்வத் தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நான்கு கால வேள்வி, வழிபாடுகளுடன் சிரவையாதீன குருமகா சன்னிதானங்களின் அருளார்ந்த தலைமையில் இன்று (வைகாசி 9) மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணியளவில் கோபுர விமானக் கலசத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் திருக்குட நன்னீராட்டுச் செய்து அன்பர்களுக்கு ஆசி வழங்கினார்கள்.
வேள்வி, வழிபாடுகளை கெளமார மடாலயம், சிரவையாதீன அருட்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment