காலகாலேசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோவில். உயிர்களை அழிக்கும் தனது சக்தியை இழந்த காலன் இத்தலத்தில் மணலும் நுரையாலுமான லிங்கம் செய்து வழிபட்டுத் தன் அழிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றார் என்பது தொன் வரலாறு. இதன் காரணமாக இக்கோவிலில் சிவன் காலகாலேசுவரர் எனப்படுகிறார். காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், தம்பதியினர் அறுபதாம் திருமணம் செய்துகொள்கின்றனர். திருக்கடையூர் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் சக்தி கொண்ட திருத்தலமாகப் பெருமை பெற்றாற்போல இத்திருத்தலமும் விளங்குவதால் திருக்கடையூருக்கு இணையாகக் கொங்கு நாட்டுத் திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment