Monday, October 8, 2018

மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் திருத்தலம் எது ?

பேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும். மேலும் சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதாலும் இத்தலம் ‘மேலைச் சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தான் தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப் போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை பேரூர் கோயிலில் காணலாம்.
கோயிலின் முன்பு ‘பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள்.
இங்குள்ள பனைமரம் ‘இறவாப்பனை’ எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.
இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

No comments:

Post a Comment