Saturday, May 18, 2019

திருக்குறளும் வருக்கக் குறளும் - பகுதி 4

பெண்கள் பெருமை
வள்ளுவர், வண்ணச்சரபர் இருவருமே பெண்களை உயர்ந்தோர்களாகவே காட்டுகின்றனர். மெய்யியல் அடிப்படையில் நோக்கினால் ஆன்மா எனும் உயிருக்கு ஆண் பெண் என்னும் பால் வேறுபாடுகள் இல்லை. எனவே வழிபாட்டிலும், முக்தி நிலையிலும் வேறுபாடுகள் இல்லை என்பதை நுண்ணிதின் உணரலாம். இவ்வடிப்படையை உணர்ந்த ஞானிகள் பெண்களை இழித்துரைக்க மாட்டார்கள். வள்ளுவர் பெண்ணே பெருமையுடைத்து எனக் குறிப்பிட்டதோடு,

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். (குறள்.54)

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. (குறள்.57)

என்றும் பதிவு செய்கிறார்.
வண்ணச்சரபர்,

நங்கையரில் கற்பினர்க்கே நானிலத்தும் மேனிலத்தும்
சங்கையற்ற மேன்மை தகும். (வ.குறள் 116)

நாரியரும் கற்கை நலமென்று உரைக்குநரைப்
பாரில் இகழ்வார் பலர். (வ.குறள். 117)

என்ற குறட்பாக்களின் வழி வள்ளுவரின் வாய்மொழியை அடியொற்றிப் பெண்ணினத்தைப் பெருமை படுத்துகிறார் எனலாம்.
தொடரும்...

முனைவர் கோ.ப.நல்லசிவம்

No comments:

Post a Comment