துறவறம்
துறவறம் எது என்பதைப் பலரும் பலவிதமாகப் பலகாலங்களாகச் சொல்லிவந்துள்ளனர். ஐம்புலனடக்கமே சிறந்த துறவு என்பதே அனைவரின் முடிந்த முடிவாகும். இவ்வடிப்படையை வள்ளுவர் நீத்தார் பெருமை என ஒரு அதிகாரத்தையே படைத்து நிறுவியுள்ளார்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (குறள்.24)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (குறள்.25)
இந்திரனே சாலுங் கரி. (குறள்.25)
என்று துறவு குறித்த தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
வண்ணச்சரபர்,
இலௌகீக வைதீகத்து எந்நிலைக்கும் என்றும்
உலவாத மெய்யே உரம். (வ.குறள். 187)
அனீங்கத் துறந்தேற்று அருந்தவமே செய்யும்
முனீந்திரரே பாரின் முதல். (வ.குறள். 239)
அறமே உயர்வென்று அறிவார் அடைவார்
திறமாய தெய்வச் செயல். (வ.குறள். 224)
எனவரும் குறள்களின் மூலம் துறவறம் குறித்த தம் கருத்தைத் தெரிவிக்கிறார்.
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
No comments:
Post a Comment