Monday, May 20, 2019

திருக்குறளும் வருக்கக் குறளும் - பகுதி 5

ஈதலறம்
அறத்தில் தலையாயது ஈதலறமாகும். ஈத்துவக்கும் இன்பம் என்பார் வள்ளுவர். கொடை குறித்த இலக்கியப் பதிவுகள் எண்ணிலடங்கா. காலந்தோறும் இவ்வறம் குறித்த வலியுறுத்தல்கள் பல்வேறு சான்றோர்களால் எடுத்தாளப்பட்டுள்ளன. சங்கப்புலவன் நக்கீரன் செல்வத்துப் பயனே ஈதல் எனக்குறிப்பிட்டும் அச்செல்வத்தைத் தனியாக அனுபவிக்க நினைத்தால் தப்பு பலவே என எச்சரித்தும் ஈதலறத்தை உணர்த்திய பாங்கு நாமறிந்ததே.
ஈகையின் இலக்கணமாக,

வறியார்க்(கு) ஒன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்.221)

என்பதைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள்,

அழாஅது நல்கும் அறிவாளன் செல்வம்
வழாஅது மன்னும் வளர்ந்து.(வ.குறள். 201)

ஈகைத் தொழிலே இனிதென் றுணராதார்
ஓகைக்கு இடையூறு உறும். (வ.குறள். 4)

இயென்பொறிபன் மூன்றாம் ஒற்று ஏய்சொல்நுவலாதுஈந்து
உயென்கை பலநூலு ரை. (வ.குறள். 158)

என ஈகையின் சிறப்பைப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றார்.

தொடரும்...

முனைவர் கோ.ப.நல்லசிவம்


No comments:

Post a Comment