Thursday, May 16, 2019

ஸ்ரீ விருட்ச பீடம் - கிச்சகத்தியூர்

   கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை அருகே உள்ள கிச்சகத்தியூரில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ விருட்ச பீடம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று (16.05.2019) நடைபெற்றது. சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள், பேரூராதீன குருமகா சன்னிதானங்கள், தென்சேரி மலையாதீன குருமகா சன்னிதானங்கள், காமாட்சிதாச அடிகளார், கிருஷ்ணமூர்த்தி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு 27 நட்சத்திர அதி தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி திருக்குடமுழுக்கு செய்து அன்பர்களுக்கு ஆசி வழங்கினார்கள்...
சிரவையாதீனம், பேரூராதீனம், தென்சேரியாதீனம்,
ஸ்ரீ விருட்ச பீடம் நிறுவனர் லட்சுமிதாச சுவாமிகள்...

      
நதிகளெல்லாம் பலதேசம் ஓடியபின் கடலில் சங்கமம் ஆவது போல் இப்பூவுலகில் பிறந்த மனிதர்கள் எல்லாம் அவர் செய்த பாவ புண்ணியம் எனும் கர்ம வினைப் பயனாக வாழ்வில் இன்ப துன்பங்களை பெற்று வாழ்ந்து இறுதியில் இறைவனுக்குள்  ஆன்மா ஒடுங்குகிறது. 
   இதில் இறைவன் பால் நாட்டம் கொண்டு நல் வழியில் செல்லும் ஆன்மாக்கள் முக்தி பெற்று மீண்டும் பிறப்பு எடுப்பதில்லை பாவ வழியில் வாழ்ந்து மடியும் ஆத்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து தான் செய்த பாவ வினைகளுக்கு உண்டான பலன்களை அனுபவிக்க நேர்கிறது இதனையே கர்மபலன் என்கிறோம் இத்தகைய கர்மவினையின் பலன்களை வழிபாடுகள் மூலம் நீக்குவதற்கு அவர்கள் வழிபட வேண்டிய சூழ்நிலை முறைப்படி அமைக்கப் பட்டுள்ள இடமே ஸ்ரீ விருட்ச பீடமாகும்.
திருக்குட நன்னீராட்டு
     ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் அவரவர் நட்சத்திர அதி தேவதைகளும் அதற்கு உண்டான பரிகார விருட்சங்களும் பலன் தரும். அத்தகைய 27 நட்சத்திர அதி தேவதைகள், 27 நட்சத்திர விருட்சங்களுக்கு கீழே புதிதாக சில மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்து திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் அன்பர்களுக்கு ஆசி வழங்கியபோது...

No comments:

Post a Comment