Monday, October 29, 2018

கும்மியாட்டம் - மாநில முருக பக்தர்கள் பேரவை நான்காவது மாநில மாநாடு

பொம்மபுர ஆதீனம் - மாநில முருக பக்தர்கள் பேரவை நான்காவது மாநில மாநாடு

பழனியாதீனம் - மாநில முருக பக்தர்கள் பேரவை நான்காவது மாநில மாநாடு

பேரூராதீன குருமகா சன்னிதானங்களின் அருளாசியுரை - தைப்பூசப் படித்துறையில்

திலகவதியார் திருவருள் ஆதீனம் - மாநில முருக பக்தர்கள் பேரவை நான்காவது மாந...

மடாதிபதிகள் தாமிரபரணி வழிபாடு - திருநெறிய தெய்வத்தமிழில்

Thirupugal - திருப்புகழ் - சிரவை சகோதரர்கள்

Thirupugal - திருப்புகழ் - சிரவை சகோதரர்கள்

Thirupugal - திருப்புகழ் - சிரவை சகோதரர்கள்

Monday, October 8, 2018

கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும் திருத்தலம் எது ?

காலகாலேசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோவில். உயிர்களை அழிக்கும் தனது சக்தியை இழந்த காலன் இத்தலத்தில் மணலும் நுரையாலுமான லிங்கம் செய்து வழிபட்டுத் தன் அழிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றார் என்பது தொன் வரலாறு. இதன் காரணமாக இக்கோவிலில் சிவன் காலகாலேசுவரர் எனப்படுகிறார். காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், தம்பதியினர் அறுபதாம் திருமணம் செய்துகொள்கின்றனர். திருக்கடையூர் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் சக்தி கொண்ட திருத்தலமாகப் பெருமை பெற்றாற்போல இத்திருத்தலமும் விளங்குவதால் திருக்கடையூருக்கு இணையாகக் கொங்கு நாட்டுத் திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது.

மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் திருத்தலம் எது ?

பேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும். மேலும் சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதாலும் இத்தலம் ‘மேலைச் சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது. பொதுவாக சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தான் தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப் போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை பேரூர் கோயிலில் காணலாம்.
கோயிலின் முன்பு ‘பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள்.
இங்குள்ள பனைமரம் ‘இறவாப்பனை’ எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.
இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

Sunday, October 7, 2018

சங்க இலக்கியத்திலும் திருமுறையிலும் இடம் பெற்றுள்ள ஓரே நூல் எது ?

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக்  கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

வண்ணச்சரபம் திருப்புகழ் - Vannachsarabam Thirupukal

Vinayagar Chathurthi - விநாயகர் சதுர்த்தி

Perur Adhinam - பேரூர் ஆதீனம்

காந்தி ஜெயந்தி வாழ்த்துரை

சங்கு கல் மண்டபம்

Wednesday, October 3, 2018

சிரவைக் குமரகுருபரக் கடவுள் வாரப்பதிகம்


கௌமார மடாலயம், சிரவையாதீனத்தின் மூன்றாம் குருமகா சன்னிதானங்கள் தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்செய்த சிரவைக் குமரகுருபரக் கடவுள் வாரப்பதிகம்.



கௌமார மடாலயம் சிரவை தண்டபாணிக் கடவுள் திருக் கோயிலில், ஒவ்வொரு மாதமும் கிருத்திகைத் திருநாளில் உற்சவர் குமரகுருபரக் கடவுளுக்கு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு முடிந்து குருமூர்த்தமாக திரு வீதி உலாப் புறப்படும் பொழுது அந்தந்த மாதப் பதிகப் பாடலுடன், அன்று என்ன கிழமையோ அதற்குரிய வாராப் பதிகச் செய்யுளும் ஓதுவா மூர்த்திகளால் விண்ணப்பம் செய்யப்படுகிறது...


               கட்டளைக் கலித்துறை
மாஇரு ஞாலம் தனில்வள மாக வதிந்திடவும்,
    சேய் அருள் பெற்ற கவுமாரர் கூட்டத்தில்ச் சேர்ந்திடவும்
நீ அருள் செய்திட வேண்டினன்; உள்ளம் நெகிழும்வண்ணம்
    ஞாயிறு நாளில் வரவேணும் வள்ளிதன் நாயகனே !

அங்கட் பரமன் விழிவழித் தோன்றி, அழல்உதித்த
    செங்கட் கடாவைநல் வாகனம் ஆக்கிச் சிவன்மகிழ
அங்கப் பிரணவ மந்திரம் சொன்ன அருட்குமரா !
    திங்கட் கிழமையில் வந்தெம் துயரினைத் தீர்த்தருளே !

செவ்வாய் உமையவள் கந்தன் எனப்பெயர் செப்பிமகிழ்
    ஒவ்வாப் புகழ்ச்சிர வைத்தலத் துற்றே ஒளிர்குகனே !
இவ்வாழ் வினில்த் துன்பம் எய்தாத வண்ணம் எமைப்புரக்கச்
    செவ்வாய்க் கிழமை தரிசனம் ஈந்தருள் செய்குதியே !

இதம்ஆர் கவிபொழி அண்ணா மலைக்கிளி இன்தமிழ்ப்பா
    விதம்ஆகக் கேட்டு மகிழும் குருபர வேலவனே !
பதவாரம் கொண்ட கவுமாரர் போற்றும் பராபரனே !
    புதவாரம் தன்னில்மெய்க் காட்சிதந் தெம்மைப் புரந்தருளே.

தயாபரன் ஆன சிவன்உமை நாப்பண் தனிச்சிறப்பால்
    வியாபகம் ஆக விளங்கும் குருபர வித்தகனே !
வயாவற நீக்கித் திருவருள்ச் செல்வ வளம்பெறவே
    வியாழக் கிழமையில் வந்தருள் செய்திட வேண்டுதுமே.

வள்ளிக் கொடியுடன் தெய்வானை யம்மன் வயங்குறவே
    புள்ளிக் கலாப மயில்மீது மேவும் எம் புண்ணியனே !
கொள்ளித் தலையின் எறும்பெனும் உள்ளம் குளிர்தரவே
    வெள்ளிக் கிழமை அருட்காட்சி நல்கிட வேண்டுவனே.

கனஉளம் கொண்ட கவுமாரர் போற்றிக் கவின்சிரவைத்
    தனிமடத் தற்புதக் கோயில் விளங்கியல் சண்முகனே !
நனிஉளம் வாடிடும் எம்துயர் மாற்றிட, நன்மயிலில்
    சனிநாளில் வந்து திருவருட் சேவையைச் சாதிக்கவே.

(இந்தப் பதிவு, சிரவைக் கௌமார சபை வெளியிட்ட சுந்தரர் சொற்றமிழ் என்ற நூலில், 223, 224, 225 ஆகிய பக்கங்களிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது)

Tuesday, October 2, 2018

#சிரவையாதீனத்தில்_எழுத்தாணிப்பால்_விழா
ஐப்பசித் திங்கள் 2 ஆம் நாள், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு (19.10.2018).
நவராத்திரியில் விசயதசமியன்று விநாயகரையும் கலைமகளையும் வழிபட்டுக் குழந்தைகளுக்கு எழுத்தறிவூட்டத் தொடங்குவது நம் பழைய மரபு. இம்முறையில் வழிபாட்டுற்குப் பின் பெற்றோரில் ஒருவரே குழந்தையைத் தன் மடியில் இருத்தி முதலில் நெல்லிலும், அடுத்துக் கற்பலகையிலும் அகர வரிசையை எழுதவைப்பர். எழுத்தாணிப்பால் என்னும் இந்தச் சீரிய மரபு சிலகாலமாக எளிய மக்களிடையே மங்கி வருகின்றது, நம் பழைய பண்பாட்டைப் பாதுகாக்கும், பணியாக கோவை கௌமார மடாலயம், சிரவையாதீனத்தில் விசயதசமியன்று எழுத்தாணிப்பால் விழா நடத்தப் பெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
15.10.2018 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு: 94428 25376