Tuesday, May 28, 2019
Monday, May 27, 2019
Sunday, May 26, 2019
Saturday, May 25, 2019
Friday, May 24, 2019
Thursday, May 23, 2019
திருக்குறளும் வருக்கக் குறளும் - பகுதி 7
வண்ணச்சரபம் தவத்திரு. தண்டபாணி சுவாமிகள் |
பொதுவாக
வள்ளுவரும் வண்ணச்சரபரும் ஒத்துப்போகும் குறிப்பிட்ட சில இடங்கள் ஈண்டுக்காட்டப்பட்டன. பொதுவாக, உழவைச் சிறப்பித்தல், இல்லறம் போற்றல், தெய்வ வழிபாடு, உவமைகள், அரசன் குறித்த வரையறைகள், சமுதாயச் சிந்தனைகள் போன்ற பல பொருண்மையில் இவ்விருவரும் ஒத்துப்போகின்றனர் என்பது ஆய்வின் வழி உணர முடிகிறது. சான்றுகளாக, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் எனும் குறட்கருத்து, வருக்கக் குறளில்...
உழொரு தொழிலேமிக்கு உத்தமமென்று ஓர்ந்தார்
அழொலி மிடிநோய் அறும். (வ.குறள் 210)
என்றும்,
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல். (குறள்.70)
தம் மின் தம்மக்கள் அறிவுடைமை என்னும் குறட்பாக்களின் கருத்து.
தந்தை பெறும்புகழைத் தம்புகழ்ச்சி யால்மறைக்கும்
விந்தையுற்றார் மானிடரில் மேல். (வ.குறள். 104)
என்றும், முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் எனும் குறட்கருத்து.
இட்ட படிவருமென்று ஏமாந்து நாட்கழிக்கப்
பட்டவர்கள் எல்லாம் பதர். (வ.குறள். 18)
என்றும், செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் எனும் குறட்கருத்து,
கேள்விப் பெரும்பயனே கேடற்றது என்றுணர்வார்
ஆள்வித்தைக்கு உண்டாம் அணி. (வ.குறள். 39)
எனவும் வருவதைக் காணலாம்.
நிறைவாக...
வள்ளுவரும் வண்ணச்சரபரும் பல்வேறு இடங்களில் ஒத்துப்போகும் இடங்களை மேற்கண்ட பல சான்றுகளின்வழி இக்கட்டுரை நிறுவியுள்ளது. வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் தொடங்கி வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். வண்ணச்சரபர் தம் காலத்தில் மிக்கிருந்த கொலை, புலை, பெண்ணாசை, போலித்துறவு இவற்றை மட்டுமே மையப்பொருளாகக் கொண்டு வருக்கக்குறளில் பல பாக்களைப் படைத்துள்ளார். உயிரிரக்கம் மிக்க சமூகத்தைப் படைப்பதில் இருவருக்கும் இருந்த வேட்கை இருவரது குறட்பாக்களின் வழியேயும் நன்கு புலனாகிறது. சாதி, மதம், இனம் எனும் குறுகிய மனப்பான்மையை விட்டொழித்து, சமரச சமயத்தை உருவாக்க, மனிதநேயம் தழைத்து உலகம் அமைதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ வண்ணச்சரபரின் வருகைக்குறள் மிகச்சிறந்த கையேடு என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. இன்றைய பரபரப்பான சூழலில் சிக்கித் தவிக்கும் மனித குலத்திற்கு இத்தகைய அருட் பனுவல்கள் உறுதியாக அமைதியை அளிக்கவல்லன என்பதை உணர் / உணர்த்த வேண்டியது அவசியம்.
உலகிற்கு உதவும் உணர்வுடையார் தாமே
இலகுண்மை ஞானத் தினர். (வ.குறள். 5)
நிறைவு.
முனைவர் கோ.ப.நல்லசிவம்
திருநெறிய தெய்வத் தமிழ்ப் பாடல்கள் வீரமாத்தி அம்மனுக்கு விண்ணப்பம்
பன்னிரு திருமுறை, திருப்புகழ், மருதமலை அலங்காரம், அபிராமி அந்தாதி, பச்சை நாயகி அம்மன் பிள்ளைத்தமிழ், முருகன் மழைப்பதிகம், கந்தர் அநுபூதி, சைவசமய வாழ்த்து ஆகிய தெய்வத் தமிழ்ப் பாடல்கள் கோவை, விளாங்குறிச்சி, அருள்மிகு வீரமாத்தி அம்மனுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு திருநெறிய தெய்வத் தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நான்கு கால வேள்வி, வழிபாடுகளுடன் சிரவையாதீன குருமகா சன்னிதானங்களின் அருளார்ந்த தலைமையில் இன்று (வைகாசி 9) மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணியளவில் கோபுர விமானக் கலசத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் திருக்குட நன்னீராட்டுச் செய்து அன்பர்களுக்கு ஆசி வழங்கினார்கள்.
வேள்வி, வழிபாடுகளை கெளமார மடாலயம், சிரவையாதீன அருட்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Wednesday, May 22, 2019
திருப்புகழ் | ஆறுமுகம் ஆறுமுகம் | Arumugam ArumugamThiruppugazh | அருள்ம...
கோவை, விளாங்குறிச்சி, அருள்மிகு வீரமாத்தி அம்மன் திருக்கோயில் திருநெறிய தெய்வத் தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நிகழ்வுகள்...
வேள்வி, வழிபாடுகள்: சிரவையாதீன அருட்பணி மன்றத்தினர், கெளமார மடாலயம், சின்னவேடம்பட்டி, கோவை - 49. தொடர்புக்கு: 0422 2666370.
Tuesday, May 21, 2019
திருக்குறளும் வருக்கக் குறளும் - பகுதி 6
துறவறம்
துறவறம் எது என்பதைப் பலரும் பலவிதமாகப் பலகாலங்களாகச் சொல்லிவந்துள்ளனர். ஐம்புலனடக்கமே சிறந்த துறவு என்பதே அனைவரின் முடிந்த முடிவாகும். இவ்வடிப்படையை வள்ளுவர் நீத்தார் பெருமை என ஒரு அதிகாரத்தையே படைத்து நிறுவியுள்ளார்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (குறள்.24)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (குறள்.25)
இந்திரனே சாலுங் கரி. (குறள்.25)
என்று துறவு குறித்த தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
வண்ணச்சரபர்,
இலௌகீக வைதீகத்து எந்நிலைக்கும் என்றும்
உலவாத மெய்யே உரம். (வ.குறள். 187)
அனீங்கத் துறந்தேற்று அருந்தவமே செய்யும்
முனீந்திரரே பாரின் முதல். (வ.குறள். 239)
அறமே உயர்வென்று அறிவார் அடைவார்
திறமாய தெய்வச் செயல். (வ.குறள். 224)
எனவரும் குறள்களின் மூலம் துறவறம் குறித்த தம் கருத்தைத் தெரிவிக்கிறார்.
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
Monday, May 20, 2019
திருக்குறளும் வருக்கக் குறளும் - பகுதி 5
ஈதலறம்
அறத்தில் தலையாயது ஈதலறமாகும். ஈத்துவக்கும் இன்பம் என்பார் வள்ளுவர். கொடை குறித்த இலக்கியப் பதிவுகள் எண்ணிலடங்கா. காலந்தோறும் இவ்வறம் குறித்த வலியுறுத்தல்கள் பல்வேறு சான்றோர்களால் எடுத்தாளப்பட்டுள்ளன. சங்கப்புலவன் நக்கீரன் செல்வத்துப் பயனே ஈதல் எனக்குறிப்பிட்டும் அச்செல்வத்தைத் தனியாக அனுபவிக்க நினைத்தால் தப்பு பலவே என எச்சரித்தும் ஈதலறத்தை உணர்த்திய பாங்கு நாமறிந்ததே.
ஈகையின் இலக்கணமாக,
வறியார்க்(கு) ஒன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்.221)
என்பதைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள்,
அழாஅது நல்கும் அறிவாளன் செல்வம்
வழாஅது மன்னும் வளர்ந்து.(வ.குறள். 201)
ஈகைத் தொழிலே இனிதென் றுணராதார்
ஓகைக்கு இடையூறு உறும். (வ.குறள். 4)
இயென்பொறிபன் மூன்றாம் ஒற்று ஏய்சொல்நுவலாதுஈந்து
உயென்கை பலநூலு ரை. (வ.குறள். 158)
என ஈகையின் சிறப்பைப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றார்.
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
Sunday, May 19, 2019
தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகளின் திருப்பணிகளில் சில...
தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள் |
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியான 1994வரை வாழ்ந்த இத்திருமகனார் தனது வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்கள் அனந்தம். பல்வேறு துறைகளில் தம் முத்திரையைப் பதித்தவர் இவர். சமயவாதி, சொற்பொழிவாளர், கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர், நிர்வாகி, மடாதிபதி என்று பல்வேறு நிலைகளில் அவர் நிலைத்து நின்றாலும் காலம்காலமாக அவர் போற்றப்படுவது அவர் செய்த ஆலயத் திருப்பணிகளுக் காகத்தான். எங்கும் கோயில் திருப்பணிகள் சிறக்கவே அவர் அவதரித்தார் என்றாலும் தவறில்லை என்றே தோன்றுகிறது. அந்த அளவு அத்துறையில் இவர் ஆழங்கால்பட்டவர்.
தோற்றப்பொலிவு
அவரது தோற்றமே எவரையும் கவரவல்லது. நல்ல மாநிறம், கனத்த சரீரம், நீண்ட விரல்கள், அழகிய வெண்தாடி, கழுத்தில் எப்பொதும் திகழும் அக்கமணி மாலை, நெற்றியில் திகழும் நீறு, அதோடு கூடிய அகலமான குங்குமம், நலமா எனத் தேன் ஒழுக்கக் கேட்கும் இனிய குரல் இத்தகைய ஒரு மாமுனிவரை எப்போது இனி பார்ப்போம் என்ற ஏக்கமே இவரை எண்ணும்போது மனதில் தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பு உண்டு என்பார்கள். அதுபோல இப்பெருந்தகை எங்கு திருவடி பதித்தாலும், அந்த இடம் செல்வம் கொழிக்கும் திருவிடமாக மாறியது என்றால் மிகையில்லை .
மண்ணாளும் அரசர்களும், மதியாளும் அறிஞர்களும் மன்னர் இவர் வாழிடத்தைச் சூழ்ந்து நின்றார்கள்.
கொங்குநாடு அருளிற் பெரியது; ஆனால் அளவிற் சிறியது; கோயில்களும் சிறியவையே; ஆனால் கால மாற்றத்தால் அவையும் புரப்பாரின்றிக் கிடந்தன. இந்த நிலையை மாற்றி, இப்பகுதியை அருள்நலம் சூழ்ந்த பகுதியாக மாற்றியவர் இவரே என்னல் உண்மை ஆகும். எங்கு திருப்பணி வேண்டியிருந்தாலும், திருப்பணி தொய்ந்திருந்தாலும், "அழையுங்கள் சிரவை ஆதீனத்தை" என்ற கோரிக்கைதான் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தது.
தோற்றப்பொலிவு
அவரது தோற்றமே எவரையும் கவரவல்லது. நல்ல மாநிறம், கனத்த சரீரம், நீண்ட விரல்கள், அழகிய வெண்தாடி, கழுத்தில் எப்பொதும் திகழும் அக்கமணி மாலை, நெற்றியில் திகழும் நீறு, அதோடு கூடிய அகலமான குங்குமம், நலமா எனத் தேன் ஒழுக்கக் கேட்கும் இனிய குரல் இத்தகைய ஒரு மாமுனிவரை எப்போது இனி பார்ப்போம் என்ற ஏக்கமே இவரை எண்ணும்போது மனதில் தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பு உண்டு என்பார்கள். அதுபோல இப்பெருந்தகை எங்கு திருவடி பதித்தாலும், அந்த இடம் செல்வம் கொழிக்கும் திருவிடமாக மாறியது என்றால் மிகையில்லை .
மண்ணாளும் அரசர்களும், மதியாளும் அறிஞர்களும் மன்னர் இவர் வாழிடத்தைச் சூழ்ந்து நின்றார்கள்.
கொங்குநாடு அருளிற் பெரியது; ஆனால் அளவிற் சிறியது; கோயில்களும் சிறியவையே; ஆனால் கால மாற்றத்தால் அவையும் புரப்பாரின்றிக் கிடந்தன. இந்த நிலையை மாற்றி, இப்பகுதியை அருள்நலம் சூழ்ந்த பகுதியாக மாற்றியவர் இவரே என்னல் உண்மை ஆகும். எங்கு திருப்பணி வேண்டியிருந்தாலும், திருப்பணி தொய்ந்திருந்தாலும், "அழையுங்கள் சிரவை ஆதீனத்தை" என்ற கோரிக்கைதான் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தது.
இவருடைய திருப்பணியின் எண்ணிக்கையை அளவிடமுடியாது. மறைந்த 64-வது நாயனாரும் இவரது ஆத்ம நண்பருமான திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்; "சிரவை ஆதீனம் எத்தனை கோயில்களைத் திருப்பணி செய்து குடமுழுக்குக் கண்டது என்ற கணக்கு அவருக்கே தெரியாது”. உண்மை அதுதான்.
அவிநாசி
இவரது திருப்பணி அவிநாசியில்தான் புகழ் பெற ஆரம்பித்தது எனலாம். முதன்முதலாக இக்கோயிலின் அம்மன் தேருக்கு, இரும்பு அச்சு நிறுவவேண்டி இருந்தது. அன்பர்கள் சுவாமியை வேண்ட, இத்திருப்பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று மிகவும் சிரமமான அக்காலத்தில் வசூல் செய்து அம்மன் தேருக்கு இரும்பு அச்சு நிறுவினார்கள்.
அவிநாசி இராசகோபுரத் திருப்பணி
அவிநாசியில் முன்னர் இராசகோபுரம் இருந்தது. இடைக்காலத்தில் இடிந்து விழுந்துவிட்டது. இதை இடிக்கச் செய்தவர் ஆங்கிலேய ஆட்சியர் என்பர். கல்கால உத்தரத்தில் ஒரு உத்தரத்தில் விரிசல் கண்டிருந்தது. இதன் காரணமாக, மீண்டும் இராசகோபுரம் எழுப்ப வழியில்லாது போயிற்று. அப்போது, அறநிலையத்துறையின் துணை ஆணையராக விளங்கிய சூரியராஜ் என்பவர் திருக்கோயில் செயல் அலுவலர் திரு. பரமசிவத்தை அனுப்பி, சுந்தர சுவாமிகளை இத்திருப்பணிக்குத் தலைமை ஏற்கச் செய்தார். சுவாமிகள் மிக்க விருப்புடன் இப்பணியினை ஏற்று, மிகவும் உழைத்து, உடைந்த கல் உத்தரத்திற்குப் பதில் காங்கிரீட் உத்தரம் அமைத்து, அதன்மீது புதிய எழுநிலைக் கோபுரம் எழும்ப வழி செய்தார். இக்கோபுரக் குடமுழுக்கு 1980ல் நிகழ்வுற்றது. மிகவும் அரிய செயல் இது. தொடர்ந்து, சுவாமிகள் அருட்செல்வர் உதவியுடன், அம்மன் கோயிலுக்கு ஐந்து நிலை இராசகோபுரத்தையும் புதிதாக அமைத்தார்கள்.
அவிநாசி திருத்தேர்த் திருப்பணி
கிருபானந்த வாரியார் சுவாமிகளுடன் சுந்தர சுவாமிகள் |
இவரது திருப்பணி அவிநாசியில்தான் புகழ் பெற ஆரம்பித்தது எனலாம். முதன்முதலாக இக்கோயிலின் அம்மன் தேருக்கு, இரும்பு அச்சு நிறுவவேண்டி இருந்தது. அன்பர்கள் சுவாமியை வேண்ட, இத்திருப்பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று மிகவும் சிரமமான அக்காலத்தில் வசூல் செய்து அம்மன் தேருக்கு இரும்பு அச்சு நிறுவினார்கள்.
அவிநாசி இராசகோபுரத் திருப்பணி
அவிநாசி இராசகோபுரம் மின்னொளியில் |
அவிநாசி இராசகோபுரம் |
அவிநாசி திருத்தேர்த் திருப்பணி
அவினாசித் திருத்தேர் |
அவினாசித் திருத்தேரில் சிற்ப வேலைப்பாடுகள் |
திருச்செங்கோடு
பாடல்பெற்ற கொங்குநாட்டுத் தலமான திருச்செங்கோட்டுத் திருக்கோயில் மலைப்பாதை அமைக்கும் பணியிலும், திருக்கோயில் திருப்பணியிலும் சுவாமிகள் தலைமையேற்று நிறைவு செய்தார்கள். அன்னூர்
பாடல்பெற்ற கொங்குநாட்டுத் தலமான திருச்செங்கோட்டுத் திருக்கோயில் மலைப்பாதை அமைக்கும் பணியிலும், திருக்கோயில் திருப்பணியிலும் சுவாமிகள் தலைமையேற்று நிறைவு செய்தார்கள். அன்னூர்
கொங்குநாட்டில் மிகப்பெரிய லிங்கத்திருமேனி இருக்கும், தலம் அன்னூர். இக்கோயில்த் திருப்பணித் தலைமை ஏற்று. பழுதுற்றிருந்த கருவறை, விமானம் முதலியனவற்றை திருப்பணி செய்து 1979 லும், பின்னர் 1990லும் மகா கும்பாபிஷேகம் செய்தார்கள்.
குமரன் குன்று
குமரன் குன்று |
குருந்தமலை
குருந்தமலை |
மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வனபத்ர காளியம்மன் கோயில் இன்று மிகப் புகழ் பெற்று விளங்குகிறது. ஒரு காலத்தில் மிகவும் அடவியாகிக் கிடந்த இடம். மூலவர் கிடையாது. சிறிய மேடையைத்தான் அம்பாளாக வழிபட்டனர். சுவாமிகள் இத்திருப்பணியில் தலைமை ஏற்று, தற்போதுள்ள மூலவர் திருமேனியைப் புதிதாக நிறுவிக் குடமுழுக்குக் கண்டார்கள். இந்தத் திருப்பணியின்போது வாரியார் சுவாமிகள் மேட்டுப்பாளையம் நகரில் தொடர்ந்து எட்டு நாட்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தித் திருப்பணி நிறைவேற உதவி செய்தார்கள். மேட்டுப்பாளையம் நகரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கும் திருப்பணி கண்டார்கள்.
அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயில் விராலிக்காடு |
காந்திபுரம், குறுக்கு வெட்டுச்சாலையில் உள்ள சித்திவிநாயகர் ஆலயம் சுவாமிகள் தலைமையில் நிறுவப்பட்டதே ஆகும். புலியகுளத்தில் உள்ள மாரியம்மன் கோயிலிலும் விரிவான திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தார்.
கோவைநகரில், இன்று நாம் காணும் கோனியம்மன் திருக்கோயில் முற்றிலுமாகச் சுவாமிகள் அமைத்ததே ஆகும். பழைய கோயில் சுண்ணாம்பாலும் சாந்தாலும் அமைந்திருந்ததை அகற்றி, கருங்கல் திருப்பணி செய்து, தற்போதுள்ள நிலையில் மாற்றி அமைத்தது சுவாமிகளேயாகும்.
கோவைநகரில், இன்று நாம் காணும் கோனியம்மன் திருக்கோயில் முற்றிலுமாகச் சுவாமிகள் அமைத்ததே ஆகும். பழைய கோயில் சுண்ணாம்பாலும் சாந்தாலும் அமைந்திருந்ததை அகற்றி, கருங்கல் திருப்பணி செய்து, தற்போதுள்ள நிலையில் மாற்றி அமைத்தது சுவாமிகளேயாகும்.
மருதமலை
மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் |
பேரூர்
பேரூர் அருள்மிகு பட்டிப்பெருமான் திருக்கோயில் சுவாமிகளுக்கு மிகவும் விருப்பமான தலமாகும். இத்தலத்துத் திருப்பணிக் குழுவிற்குச் சுவாமிகள் தலைமை ஏற்றுக் கும்பாபிஷேகம் கண்டார்கள்.
வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி கொங்குநாட்டின் மேற்கு எல்லை. இக்கோயிலின் அடிவாரத்தில் முன்னர் கோவில்கள் இல்லை. அரசமரத்தடியில் உள்ள ஒரு கல்லைச் சிவலிங்கமாக வழிபட்டு, மலை ஏறி வழிபட்டு வருவதே வழக்கமாக இருந்தது. சுவாமிகள் தலைமை ஏற்று, அடிவாரத்தில் கருங்கல் திருப்பணி செய்து, விநாயகர், சுவாமி, அம்பாளுக்குத் தனித்தனிச் சந்நிதி நிறுவித் திருப்பணி கண்டார்கள். இக்கோயிலின் திருக்குட நீராட்டின்போது அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் இராம வீரப்பன் கூறினார் "மாவட்டத்திற்கு ஒரு சுந்தர சுவாமிகள் இருந்தால் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை என்ற அமைப்பே தேவையில்லை” என்று. பொருத்தமான வார்த்தை.
கொழுமம்
அருள்மிகு தாண்டவேசுவரர் திருக்கோயில் கொழுமம் |
உடுமலைப்பேட்டை அருகில் உள்ள ஊர் கொழுமம். இவ்வூர் சங்ககாலப் புகழ் பெற்றது. கொங்குச் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இவ்வூரில் உள்ள தாண்டவேஸ்வரர் கோயில்தான் கொங்குநாட்டில் மிக அதிகமான சொத்துக்களைக் கொண்டு இலங்கிய கோயில். இனாம் ஒழிப்புக்குப்பின் வளம் சுருங்கியது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகமிக அழகானது. கும்பாபிஷேகமும் இல்லை. சுவாமிகள் திருப்பணித் தலைமையேற்று, இக்கோயில் திருப்பணியை நிறைவு செய்தார்கள்.
தென்காசியில் உள்ள புகழ்பெற்ற இராசகோபுரத் திருப்பணிக்கு தினத்தந்தி பத்திரிகை அதிபர், திரு சிவந்தி ஆதித்தன் விருப்பப்படி, திருப்பணியின் சிறப்புத் தலைவராக விளங்கிப் பணியாற்றினார்கள்.
ஆவுடையார் கோயில் (திருப்பெருந்துறை)
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் என வழங்கும் திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் திருப்பணி கண்டது. பின்னர் பாண்டிய மன்னர்கள் திருப்பணி கண்ட தலம். அற்புதமான, எழுத்தில் அடங்காத சிற்பச் சிறப்புக்கள் கொண்டது. இத்திருக்கோயில் புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சியில் இலங்குவது. ஆயினும், யாது காரணம் பற்றியோ, இக்கோயிலின் திருப்பணி நிறைவு பெறாமலே நின்றது. இது கண்டு வருந்திய துறைசை ஆதீனகர்த்தர், அப்போது நீதியரசராக விளங்கிய திரு.செங்கோட்டுவேலரின் ஆலோசனைப்படி, இக்கோயில் திருப்பணியை நமது சுந்தர சுவாமிகளிடம் ஒப்படைத்தார். சுவாமிகள் இதை மிகவும் போற்றி, ஈரோடு அழகப்பர் உதவியுடன் திருப்பணியை மிகச் சிறப்பாகவும் மிக விரைவாகவும் நிறைவேற்றினார். இந்தத் திருப்பணியின்போது, சுவாமிகள் குடிப்பதற்குக் குடிநீர் கூட கோவையில் இருந்து காரில் கொண்டுசெல்லப்படும். அந்த அளவு மிகவும் அறத்துன்பப்பட்டு, இக்கோயிலில் ஓடாது நின்று போன, திருத்தேரையும் செப்பனிட்டு ஓடச் செய்தார். பின்னர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் கருங்கல்லில் பொறிக்கச் செய்தார். விரிவான திருப்பணி மேற்கொண்டார். இத்திருப்பணியைச் சுவாமிகள் தமது வாழ்நாள் பேறாகக் கருதினார். இக்கோயில் மகாகும்பாபிஷேகத்தின்போது, காஞ்சி காமகோடி பீடம் சுவாமிகள் கூறினாராம், "யாரும் செய்ய இயலாத பணியைச் செய்துவிட்டு ஒதுங்கி நிற்காதீர்கள். முன்னே வாருங்கள், அமருங்கள் என்று" - சரிதானே? கௌமார மடாலயத் திருக்கோயில்த் திருப்பணி
ஆவுடையார் கோயில் |
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் என வழங்கும் திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் திருப்பணி கண்டது. பின்னர் பாண்டிய மன்னர்கள் திருப்பணி கண்ட தலம். அற்புதமான, எழுத்தில் அடங்காத சிற்பச் சிறப்புக்கள் கொண்டது. இத்திருக்கோயில் புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சியில் இலங்குவது. ஆயினும், யாது காரணம் பற்றியோ, இக்கோயிலின் திருப்பணி நிறைவு பெறாமலே நின்றது. இது கண்டு வருந்திய துறைசை ஆதீனகர்த்தர், அப்போது நீதியரசராக விளங்கிய திரு.செங்கோட்டுவேலரின் ஆலோசனைப்படி, இக்கோயில் திருப்பணியை நமது சுந்தர சுவாமிகளிடம் ஒப்படைத்தார். சுவாமிகள் இதை மிகவும் போற்றி, ஈரோடு அழகப்பர் உதவியுடன் திருப்பணியை மிகச் சிறப்பாகவும் மிக விரைவாகவும் நிறைவேற்றினார். இந்தத் திருப்பணியின்போது, சுவாமிகள் குடிப்பதற்குக் குடிநீர் கூட கோவையில் இருந்து காரில் கொண்டுசெல்லப்படும். அந்த அளவு மிகவும் அறத்துன்பப்பட்டு, இக்கோயிலில் ஓடாது நின்று போன, திருத்தேரையும் செப்பனிட்டு ஓடச் செய்தார். பின்னர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் கருங்கல்லில் பொறிக்கச் செய்தார். விரிவான திருப்பணி மேற்கொண்டார். இத்திருப்பணியைச் சுவாமிகள் தமது வாழ்நாள் பேறாகக் கருதினார். இக்கோயில் மகாகும்பாபிஷேகத்தின்போது, காஞ்சி காமகோடி பீடம் சுவாமிகள் கூறினாராம், "யாரும் செய்ய இயலாத பணியைச் செய்துவிட்டு ஒதுங்கி நிற்காதீர்கள். முன்னே வாருங்கள், அமருங்கள் என்று" - சரிதானே? கௌமார மடாலயத் திருக்கோயில்த் திருப்பணி
திருமடத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள கருவறையை முற்றிலும் கற்றளியாக அமைத்தார். மொத்தம் 51 கற்களால் மட்டுமே இந்தத் திருப்பணி நிறைவு செய்யப்பட்டது. இக்கோயில் விமானத்தைத் தஞ்சை தட்சிணமேரு விமானத்தைப் போன்று உயரமாக அமைத்து விரிவாகத் திருப்பணி செய்தார்.
காங்கயத்தை அடுத்த சிலம்பகவுண்டன் வலசு வெங்கடரமணசாமிக் கவுண்டர் 1919ஆம் ஆண்டில் தமது தோட்டத்தில் ஒரு சிவாலயம் எழுப்பினார். அவருக்குப்பின் அக்கோயில் பூசையின்றிப் போனது. அவரது பேரர் ராமசாமிக் கவுண்டர் விருப்பப்படி அக்கோயிலைப் பிரித்துக் கொணர்ந்து மடாலயத்தில் மீண்டும் நிறுவி மூன்றே மாதத்தில் குட நீராட்டும் செய்தார். இது கொங்கு நாட்டுக் கற்றளித் திருப்பணி வரலாற்றில் ஒரு மைல்கல்.
பாண்டுரங்கர் சந்நிதி புதிதாகக் கட்டினார். முருகனுக்குப் புதிதாகத் திருத்தேர் அமைத்தார். தனியாகச் சனிபகவான் கோயில் அமைக்கவும் ஏற்பாடு செய்தார். திருமடத்தில் பாம்பன் சுவாமிகள் சந்நிதி அமைத்தார். இங்ஙனம், சுவாமிகள் கண்ட திருப்பணிகள் அநந்தம். விவரிக்கின் தனிநூலாக அமையும்.
அமெரிக்க தாமரைக் கோயில் நிறுவனர் சச்சிதானந்தா சுவாமிகளுடன் சுந்தர சுவாமிகள் |
தமிழகத்தில் மட்டும் அன்று, பிற நாடுகளிலும் திருப்பணிகள் நிறைவேற ஆலோசனைகள் நல்கினார். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் விரும்பியபடி, அமெரிக்காவில், தாமரைக் கோயில் கட்ட, மடாலயத்தில் சிற்பங்கள் செய்து அனுப்பி அக்கோயிலை நிறுவி, குடமுழுக்கும் கண்டார்.
தாமரைக் கோயிலுக்கான சிற்பங்கள் கௌமார மடாலயத்தில் செதுக்கப்பட்டபோது... |
சுவாமிகள் காலத்தில், மடாலயத்தில் கருங்கல் சிற்பிகளின் உளியோசை எப்போதும் "கல்கல்” என்று கேட்டுக்கொண்டே இருக்கும். அத்தகைய வரலாற்று நாயகர் அவர்.
சுவாமிகளிடத்தில் அற்புதமானஓர் ஆற்றல் இருந்தது. எந்தத் திருக்கோயில் திருப்பணி தடைப்பட்டிருந்தாலும் அவர் திருவடி பட்ட உடனே அந்தக் கோயில் திருப்பணி நிறைவேறிவிடும். அதற்குக் காரணம், அந்தக் கோயிலைப் பார்த்த உடன், சுவாமிகள் திருப்பணியில் சில திருத்தங்கள் செய்யக் கூறுவார். அவற்றைச் செய்ய ஆரம்பித்ததுமே திருப்பணி நிறைவேறி விடும்.
அவர் செய்யும் திருப்பணிகளில் ஏழையென்றோ பணக்காரர் என்றோ வேறுபாடு காட்டமாட்டார்.
பெருந்தொகை கொடுத்தவர்க்கு என்ன மரியாதையோ, அதே மரியாதைதான் எல்லோருக்கும். பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள் என வேறுபாடு காட்டாமல் ஒரு பெருங்கூட்டம் அவர்பால் அன்பைச் செலுத்தியது.
இக்கட்டுரை ஆசிரியர் ஆகிய நான் செயல் அலுவலராகப் பணிபுரிந்த பல திருக்கோயில்களுக்குச் சுவாமிகள் தலைமை ஏற்றுத் திருப்பணி நிறைவேற உதவினார்கள். குறிப்பாகக் கொழுமம், அன்னூர், கருவலூர், அவிநாசி ஆகிய கோயில்களைக் குறிப்பிடலாம். இந்தக்கட்டுரையில், அப்பெருமகனார் செய்த திருப்பணிகளில், ஒரு சிலவே குறிப்பிடப்பட்டுள்ளன. சிறியதும், பெரியதுமாகக் குறைந்த பட்சம் ஆயிரம் கோயில்களுக்குமேல் அவர் திருப்பணி செய்திருப்பார்.
கொங்குநாடு இன்று இந்த அளவு அருளிலும், பொருளிலும் வளர்ந்திருக்கிறது என்றால் அது சுந்தரசுவாமிகள் செய்த ஆன்மிக மறுமலர்ச்சியால்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை என்பதைச் சுவாமிகளோடு பழகியவர்கள் எல்லோரும் அறிவார்கள்.
சுவாமிகள் ஒரு கற்கண்டு மலை. அதில் எப்பக்கம் தொட்டாலும் இனிக்கும். திருப்பணி என்பது அவர் ஆற்றிய பெருந்தொண்டு. ஒரு தனி மனிதர் இத்தனை கோயில்களுக்குத் திருப்பணி செய்தார்; நிறைவு செய்தார்; தமிழிலும், வட மொழியிலும் திருக்குட நீராட்டல் செய்தார் என்பது வெறும் செய்தியன்று; வரலாறு. காலம் இதைப் பதிவு செய்யும். எதிர்காலத்தில் இன்னும் எத்தனையோ பேர் திருக்கோயில்களுக்குத் திருப்பணி செய்வார்கள்; செய்ய வேண்டும். ஆனால் அவை எல்லாம் சுந்தரர் செய்த திருப்பணிகளுக்கு இணையாகா என்பதே வெளிப்படை.
சுந்தர! நின்
சுந்தர முகமும்
அந்தமில் திருப்பணியும்
ஆரே காண்பார் இனி?
சிரவையாதீனப் புலவர்.
அழ.முத்துப்பழனியப்பன்,
மேனாள் உதவி ஆணையர்,
(இந்து சமய அறநிலையத்துறை),
வழக்கறிஞர், கோவை.
Saturday, May 18, 2019
திருக்குறளும் வருக்கக் குறளும் - பகுதி 4
பெண்கள் பெருமை
வள்ளுவர், வண்ணச்சரபர் இருவருமே பெண்களை உயர்ந்தோர்களாகவே காட்டுகின்றனர். மெய்யியல் அடிப்படையில் நோக்கினால் ஆன்மா எனும் உயிருக்கு ஆண் பெண் என்னும் பால் வேறுபாடுகள் இல்லை. எனவே வழிபாட்டிலும், முக்தி நிலையிலும் வேறுபாடுகள் இல்லை என்பதை நுண்ணிதின் உணரலாம். இவ்வடிப்படையை உணர்ந்த ஞானிகள் பெண்களை இழித்துரைக்க மாட்டார்கள். வள்ளுவர் பெண்ணே பெருமையுடைத்து எனக் குறிப்பிட்டதோடு,
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். (குறள்.54)
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. (குறள்.57)
என்றும் பதிவு செய்கிறார்.
வண்ணச்சரபர்,
நங்கையரில் கற்பினர்க்கே நானிலத்தும் மேனிலத்தும்
சங்கையற்ற மேன்மை தகும். (வ.குறள் 116)
நாரியரும் கற்கை நலமென்று உரைக்குநரைப்
பாரில் இகழ்வார் பலர். (வ.குறள். 117)
என்ற குறட்பாக்களின் வழி வள்ளுவரின் வாய்மொழியை அடியொற்றிப் பெண்ணினத்தைப் பெருமை படுத்துகிறார் எனலாம்.
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
தொடரும்...
முனைவர் கோ.ப.நல்லசிவம்
Subscribe to:
Posts (Atom)
-
# சித்திரத்_தேர் # கௌமார_மடாலயம் , தண்டபாணிக் கடவுள் திருக்கோயில்த் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்... ☀️ நமது # சிரவணபுரம் கௌமார ம...